For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோபல் பரிசு வென்றவருக்கு சிறை தண்டனை!… வங்கதேச நீதிமன்றம் அதிரடி!

08:50 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
நோபல் பரிசு வென்றவருக்கு சிறை தண்டனை … வங்கதேச நீதிமன்றம் அதிரடி
Advertisement

தொழிலாளர் நலசட்டங்களை மீறியதாக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் டாக்டர்.முகமது யூனுஸ்(83) கடந்த 1983ம் ஆண்டு கிராமீன் வங்கி என்ற பெயரில் தொடங்கிய நிறுவனம் மூலம் பலருக்கும் கடனுதவிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவரது வங்கி சிறுகடன்களுக்கான வீடு என பாராட்ட பெற்றது. வறுமைக்கு எதிரான பிரசாரத்துக்காக கடந்த 2006ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர். முகமது யூனுஸ் நிறுவிய நிறுவனங்களில் ஒன்றான கிராமீன் டெலிகாம் நிறுவனத்தில் தொழிலாளர் நல நிதியை உருவாக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொழிலாளர் நலசட்டங்களை மீறியதாக முகமது யூனுஸ் உள்பட 4 நிர்வாகிகள் மீது தொழிலாளர்நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் டாக்டர்.முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து தொழிலாளர் நலநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் ரூ.19,000 அபராதம் செலுத்தவும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 10 நாள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டது. வங்கதேசத்தில் வரும் 7ம் தேதி பொதுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டள்ளது.

Tags :
Advertisement