For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ஜெய் ஸ்ரீ ராம்', 'பிரதமர் மோடி' கோஷங்கள்.! "பொறுமை இழந்த ராகுல் காந்தி.." அமித் மாளவியா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

06:55 PM Jan 21, 2024 IST | 1newsnationuser7
 ஜெய் ஸ்ரீ ராம்    பிரதமர் மோடி  கோஷங்கள்    பொறுமை இழந்த ராகுல் காந்தி    அமித் மாளவியா வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அப்போது யாத்திரை சென்ற காங்கிரஸ்காரர்கள் மீது பாரதிய ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Advertisement

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய் ராம் ரமேஷ் என்பவரது வாகனத்தை பிஜேபியினர் சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பிஜேபி ஐடி செல்லின் தலைவருமான அமித் மாளவியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றிய வீடியோவினை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இந்த வீடியோ தொடர்பாக தனது 'X' வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் " எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் மோடி மோடி கோஷங்களை எழுப்பியதற்கு ராகுல் காந்தி இவ்வளவு கோபப்படுகிறார். இதையே அவரால் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார். இந்து விரோத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை நிராகரித்ததற்கு நாட்டு மக்கள் கொடுக்க இருக்கும் எதிர்ப்பை வரும் காலங்களில் எவ்வாறு சமாளிக்க போகிறார்.? என பதிவு செய்து இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழை நிராகரித்தன. மேலும் இது பக்திக்காக நடத்தப்படும் விழா இல்லை என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து நடத்தும் நாடகம் எனவும் விமர்சித்திருந்தனர். இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபியினர் வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்திருந்த நிலையில் அசாம் சென்ற ராகுல் காந்தியை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement