வெல்லம் நல்லது தான், ஆனால் இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!!!
உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவேன், ஆனால் என்னால் டீ இல்லாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு டீ வெறியர்கள் பலர் உள்ளனர். சிலர் எந்த சோகமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ஒரு கப் டீ குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த வகையில், டீ உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. பொதுவாகவே உடல் சோர்வாக இருந்தாலும் சரி, மனம் சோர்வாக இருந்தாலும் சரி, இரண்டு நேரங்களிலுமே டீ ஒரு நல்ல துணையாகவும் ஆறுதலாகவும் இருக்கும். டீ குடித்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சி, டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்த வகையில், தற்போது பலர் தங்களின் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், டீயில் சர்க்கரை சேர்ப்பதா அல்லது வெல்லம் சேர்ப்பதா என்கிற குழப்பம் பலருக்கு உள்ளது. வெல்லம் நமதுஹ் உடல் நலத்திற்கு மியாவும் நல்லது தான். ஆனாலும், எல்லா நேரங்களிலும் எல்லோரும் வெல்லம் எடுத்துக் கொள்வது என்ன விளைவகளை ஏற்படுத்தும் என்று நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால், வெல்லத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை, அஜீரணம், வீக்கம், வயிற்று போக்கு ஆகியவை ஏற்படுத்தும். மேலும், வெல்லத்தில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் அது உங்களின் உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெல்லம் ரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்க செய்வதால் நீரிழிவு நோயாளிகள் இத்தனை தவிர்ப்பது நல்லது. ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தும் வெல்லம் சரியாக தயாரிக்கப்படவில்லை என்றால் அது குடலில் ஒட்டுண்ணிகள் மற்றும் புழுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக முடக்கு வாதம் பிரச்சனை உள்ளவர்கள் முற்றிலுமாக வெல்லத்தை தவிர்க்க வேண்டும்.
Read more: மூட்டு வலி அதிகமா இருக்கா?? அப்போ இந்த உணவை அடிக்கடி சாப்பிடுங்க.. வித்தியாசத்தை நீங்களே பாப்பீங்க..