For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தென்னாப்பிரிக்கா அதிபர் தேர்தல்! - மீண்டும் போட்டியிடும் ஜேக்கப் ஜூமா…!

12:15 PM Apr 10, 2024 IST | Mari Thangam
தென்னாப்பிரிக்கா அதிபர் தேர்தல்    மீண்டும் போட்டியிடும் ஜேக்கப் ஜூமா…
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement

தென்னாப்பிரிக்க அதிபர் தேர்தல் மே 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.  தென்னாப்பிரிக்க அதிபராக கடந்த 2009-2019 ஆட்சி செய்த ஜேக்கப் ஸூமா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவ பரோலில் விடுவிக்கப்பட்ட ஜேக்கப் வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியாது.  அதனால் அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

தேர்தல் ஆணையத்தின் தீா்ப்பை எதிா்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அவரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.  இதனையடுத்து ஜேக்கப் ஜூமா அதிபர் தோ்தலில் போட்டியிட அந்நாட்டு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Tags :
Advertisement