முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! பணமழை கொட்டப்போகுது..!! வெளியாகும் சூப்பர் அறிவிப்பு..!!

It is also said that a hike in the dearness allowance of central government employees may be given soon. It has been reported that the central government is going to allocate the amount for this.
10:02 AM Jul 03, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும். ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45% பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ, அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

இந்நிலையில் தான், புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர். இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்நிலையில், இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். இம்முறை தேர்தலை மனதில் வைத்து அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 46 சதவிகிதமாக் உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.

மார்ச் முதல் வாரம் டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் மாத வருமானத்தில் அந்த பணம் கொடுக்கப்படும். அதேபோல் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Read More : எம்ஜிஆர் ஜெயலலிதா..!! விஜய் த்ரிஷா..!! பாடகி சுசித்ரா போட்ட புது குண்டு..!! தமிழ் சினிமாவில் பரபரப்பு..!!

Tags :
அகவிலைப்படி உயர்வுஊதிய உயர்வுபாஜக அரசுமத்திய அரசு ஊழியர்கள்
Advertisement
Next Article