For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!… முதலீடு, லாபம் என்ன?… முழு விவரம் இதோ!

07:30 AM Apr 12, 2024 IST | Kokila
பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டம் … முதலீடு  லாபம் என்ன … முழு விவரம் இதோ
Advertisement

Savings Scheme: பெண்களை பண அளவில் மேம்படுத்தும் வகையில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இதன்மூலம் எவ்வளவு முதலீடு மற்றும் லாபம் கிடைக்கும் என்பது உள்ளிட்ட முழு விவரங்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

Advertisement

இரண்டு ஆண்டுகள் கால அளவிலான முதலீடு கொண்ட இத்திட்டமானது, பெண்கள் முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதில்லை.

இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு வருடங்களில் முதலீட்டிற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, பெண்கள் சேமிக்கவும், தன்னிறைவு பெறவும் உதவும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஆகையால், ஒருமுறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 வருமானம் கிடைக்கும். அதாவது இரண்டு வருடங்களில் ரூ.2 லட்சம் முதலீட்டில் திட்டத்தின் கீழ் ரூ.31,125 வட்டி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: Gold | அடடே..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தங்கம் விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்..?

Advertisement