கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! ரூ.1 கோடி சம்பளம்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!
ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்கள், அணியில் வாய்ப்பில்லாத போதும், ஓய்வின் போதும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. உள்ளூரில் விளையாடப்படும் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் உடல் தகுதியை நிரூபிப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. ஆனால், முக்கிய வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ ஆய்வு செய்தபோது, போதிய அளவு ஊதியம் இல்லாததே ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு வீரர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 'டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம்' என்ற திட்டத்தை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ரஞ்சிக் கோப்பையில் விளையாடினால் வீரர்கள் தற்போது வாங்கி வரும் ஊதியத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகமாக ஊதியம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அவர்கள் விளையாடும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளைப் பொறுத்து ஊதியம் வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 40 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடினால், 60 ஆயிரம் ரூபாயும், 20 முதல் 40 ரஞ்சிக்கோப்பை போட்டிகளின் விளையாடினால் 50 ஆயிரம் ரூபாயும், 20 ரஞ்சிக்கோப்பை போட்டிகளுக்கும் குறைவாக விளையாடுபவர்களுக்கு நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
Read More : ’உடனே பைக்கை ஓரம் கட்டுங்கள்’..!! ’தாமதிக்காமல் இதை பண்ணுங்க’..!! உயிரே போகும் அபாயம்..!!