சூப்பர்..!! அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுவோர் ஓய்வு பெறும் பட்சத்தில், அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது ரூ.20 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், 7-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி, ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்புக் கால பணிக்கொடையானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பொது விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!