ரூ.6,000 நிவாரணத் தொகையுடன் கூடுதலாக ரூ.1,000 வழங்க திட்டம்..!தமிழ்நாடு அரசு..!
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 வழங்க இருக்கும் நிலையில் கூடுதலாக பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 30லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் சார்பில் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இது போக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 16-ந்தேதி நிவாரணத்தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் எனவும், அடுத்த 10 நாட்களில் அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள நிவாரணத்துடன் சேர்த்து பொங்கல் பரிசும் ரூ.1000 இந்த மாதமே கிடைக்கவுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் தான் முன்கூட்டியே பொங்கல் பரிசுத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ரேசன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் அடுத்த மாதம் (ஜனவரி) வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிகிறது.
இதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்பத் தலைவிகளுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே போல் இந்த மாதம் 15-ந் தேதி பெண்களுக்கு ரூ.1,000 அனுப்பப்படுகிறது. அடுத்த மாதமும் 15-ந்தேதி ரூ.1,000 வந்து விடும். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 கிடைக்க உள்ளது. 2.19 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கும் இவை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.