For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்..!! புதிய பயனர்களுக்கு பழைய தொகையும் சேர்த்து வழங்கப்படுகிறதா..? உண்மை என்ன..?

The information is going viral that the funds are being released in arrears from the month the lien was first issued till now. Let's see the truth about it.
06:46 PM Jul 20, 2024 IST | Chella
குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்     புதிய பயனர்களுக்கு பழைய தொகையும் சேர்த்து வழங்கப்படுகிறதா    உண்மை என்ன
Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல்முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிமைத்தொகை முதன் முதலாக வழங்கப்பட்ட மாதத்தில் இருந்து இப்போது வரை சேர்த்து அரியர் தொகையாக நிதி விடுவிக்கப்படுகிறது என்ற தகவல் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை தன்மையை இந்தப் பார்க்கலாம்.

Advertisement

குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமை தொகை செலுத்தப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 15ஆம் தேதி முதல் கூடுதலாக 1.48 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும், முதன் முதலாக உரிமைத் தொகை வழங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போது வரை சேர்த்து அரியர் தொகையாக நிதி விடுவிக்கப்படுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Read More : மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்ல..!! மொத்தமாக பெண்களின் வங்கிக் கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்படுகிறது தெரியுமா..?

Tags :
Advertisement