அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கே ஜாக்பாட்..!! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போகுது..!! தமிழ்நாடு அரசு மாஸ்..!!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கைகளில் ஒன்று காப்பீட்டு முறையை மாற்றுவது. தற்போது இருக்கும் காப்பீட்டை மாற்றி புதிய காப்பீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசாங்கத்திற்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநில அரசு ஊழியர்கள், தங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோரை புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு மறுசீரமைக்கும். இது தொடர்பாக பேசிய அரசு தரப்பு நிர்வாகிகள், “காப்பீடு மாறப்போகிறது. தனியார் நிறுவனங்களில்தான் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட நபர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆனால், பெரும்பாலான அரசுப் பணிகளில் இன்சூரன்ஸ் என்பது மனைவி, கணவனுக்கு மட்டுமே இருக்கும், குழந்தைகளுக்கு கூடுதல் பிரீமியம் உடன் சேரலாம்.
ஆனால், இப்போது மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும் திட்டம் உள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்டு மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தனர்.
Read More : பாராளுமன்றத்தில் மாமியார்..!! படுதோல்வியில் மருமகன்..!! உடைந்துபோன இன்ஸ்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பம்..!!