புத்தாண்டுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!! மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!! சம்பள உயர்வு..!!
ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. இதில், மிகவும் முக்கியமானது 8-வது ஊதியக் குழு சார்ந்த அறிவிப்புகள் தான். மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000-இல் இருந்து ரூ.51,480ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 8-வது ஊதிய குழுவை அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் 186% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 7-வது ஊதியக் குழுவில் இருந்து, 8-வது ஊதிய குழுவுக்கு மாறும் போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000-இல் இருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். அதேபோல ஃபிட்மென்ட் காரணி 2.86 ஆக மாற்றப்படும்போது இது சாத்தியமாகும்.
இதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஏனென்றால், ஓய்வூதியமும் 186% அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது ரூ.9,000 ஆக இருக்கக்கூடிய ஓய்வூதியம் ரூ.25,740 அதிகரிக்கப்படலாம். ஆனால், இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது அடுத்த சம்பள கமிஷன் குழுவான 8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
Read More : மன்மோகன் சிங் மறைவு..!! அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!