களைகட்டும் சீசன்!... ரசாயன மாம்பழங்களை கண்டறிவது எப்படி?
Mango: கோடை சீசனுடன் மாம்பழ சீசனும் தொடங்கியுள்ளநிலையில், ரசாயனம் கலந்த மாம்பழங்களை எப்படி கண்டறிவது குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள். தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன.
தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.
சீசன் தொடங்கியதில் இருந்து மாம்பழங்களை ஆர்வமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்போருக்கு பல்வேறு உடல்நல உபாதைகள் ஏற்படலாம். அதற்கு, மாம்பழம் வாங்கி வந்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் மாம்பழங்களை போடவேண்டும். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையாகப் பழுக்கவைத்தப் பழம். மேலே மிதக்கும் மாம்பழங்கள் செயற்கையாக பழுக்கவைத்த பழங்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
Readmore: பெங்களூரில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பா?… ஹோட்டலுக்கு வந்த மிரட்டல்!… தீவிர கண்காணிப்பில் போலீசார்!