”நம்ப முடியலனாலும் இதுதான் உண்மை”..!! வெறும் ரூ.225-க்கு வீடு விற்பனை..!! எங்கு தெரியுமா..?
இத்தாலியின் பல நகரங்கள் மக்களால் கைவிடப்பட்ட வீடுகள் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. கடந்த 2019இல் சம்பூகா டி சிசிலியா நகரமானது, பாழடைந்த வீடுகளை வெறும் 1 அமெரிக்க டாலரில் (சுமார் ரூ.85) ஏலத்தில் விற்றபோது பலரது கவனத்தைப் பெற்றது. 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த முயற்சி மேலும் பிரபலம் அடைந்தது. 2 அமெரிக்கா டாலர் (சுமார் ரூ.170) மற்றும் 3 அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.255) வீடுகள் இந்நகரத்தில் ஏலம் போனது.
அழகான இத்தாலிய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளிடையே இது வெற்றி பெற ஆரம்பித்தது. மேலும், இத்தாலியின் பிற நகரங்களான சிசிலியில் உள்ள முசோமெலி மற்றும் காம்பானியாவில் உள்ள சுங்கோலி போன்றவையும் இதைப் பின்பற்ற தொடங்கின. சிசிலியில் அமைந்துள்ள பிவோனா நகரம், ஒரு டாலருக்கும் மேல் விலையில் 10-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட சொத்துக்களில் ஒன்றை வாங்க விரும்பும் மக்களுக்கு வரி சலுகை வழங்கியது.
இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், சிறந்த வாய்ப்புகளைத் தேடி உள்ளூர்வாசிகள் நகரங்களுக்குச் சென்றதால், ஆளில்லா கிராமப் பகுதிகளில் மீண்டும் மக்களை குடியமர்த்துவதே ஆகும். ஒரு டாலருக்கு வீடு வாங்கும் யோசனை நம்ப முடியாததாகத் தோன்றினாலும், பல சந்தர்ப்பங்களில் அது வெற்றிகரமானதாக உள்ளது. இத்தாலியில் நிலவும் இந்த போக்கு பற்றி தெரிந்து கொள்ள 5 முக்கியமான விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.
இது ஒரு மோசடி அல்ல : ஆரம்பத்தில், பலருக்கு இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுந்தது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஸ்டப்ஸ். இவரது நண்பர் ஒரு டாலருக்கு வீடு வாங்கியதைக் கேள்விப்பட்டபோது ஸ்டப்ஸிற்கு சந்தேகம் எழுந்தது. இருப்பினும், அவர் இங்கு இரண்டு சொத்துக்களை வாங்கியுள்ளார்.
நிலையான கட்டிடங்கள் : வீடுகள் பழையதாகவும், பழுதுபார்க்க வேண்டிய தேவையுடனும் இருந்தாலும், அவை பொதுவாக "கட்டமைப்பு ரீதியாக நிலையானதாக" உள்ளது.
ஏலம் எவ்வாறு செயல்படுகிறது..? இந்த சொத்துக்கள் அதிக தொகை கேட்கும் ஏலதாரருக்கு விற்கப்படுகின்றன. இதில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏலதாரர்கள் 5,399 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.5 லட்சம்) டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் ஏலத்தில் வென்றால், வைப்புத்தொகை கொள்முதல் விலையின் ஒரு பகுதியாக மாறும். இல்லையென்றால், வைப்புத்தொகை திரும்பப் பெறப்படும்.
உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம் : இந்த சொத்துக்களின் விற்பனை உலகெங்கிலும் உள்ள வீடு வாங்குபவர்களை ஈர்த்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு சுமார் 21.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு வந்துள்ளது.
புதுப்பித்தல் காலக்கெடு : இங்கு வீடு வாங்குபவர்கள் 3 ஆண்டுகளுக்குள் புதுப்பித்தலை முடிக்க வேண்டும். இல்லையென்றால், டெபாசிட் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..? விவரம் உள்ளே..!!