மழைக்காலம்...!! காய்ச்சல், இருமல், சளியால் அடிக்கடி அவதிப்படுறீங்களா..? இந்த கசாயத்தை மட்டும் குடிச்சிப் பாருங்க..!!
தற்போது மழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில், நமக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல் வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு கசாயத்தின் மூலம் அந்த பாதிப்புகளை குணப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 2 துண்டு
மிளகு - 1/2 டீஸ்பூன்
மல்லி விதை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு
துளசி இலை - 10
ஓம இலை / கற்பூரவள்ளி இலை - 2
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
* இஞ்சியை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* மிளகு, மல்லி விதை, சீரகம், துளசி இலை, ஓம இலை ஆகியவற்றை இஞ்சியுடன் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்த விழுதை போட்டு ஒன்றரை கப் தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை வடிகட்டிக் கொள்ளலாம்.
* பின்னர், இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர காய்ச்சல் இருமல் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.