2 மாதங்கள் தான் ஆச்சு..!! கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்ல ரெடியான மனைவி..!! கணவரின் விபரீத விளையாட்டால் பறிபோன உயிர்..!!
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே மைகுளத்தான்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவர், மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கோபிகா (25) என்பவரை காதலித்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜவகர் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி மனைவி கோபிகா, கணவருடனான சண்டையால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக தயாராகி உள்ளார். அப்போது, கணவர் சுரேஷ், நீ போகக் கூடாது என்று கூறினாராம். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் மனைவி கேட்காததால், அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடல் மீது ஊற்றிக் கொண்டுள்ளார் சுரேஷ்.
பின்ன, விளையாட்டிற்காக தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்துள்ளார். அது எதிர்பாராதவிதமாக பற்றிக்கொண்டது. மனைவியின் கண் முன்னே தீ சுரேஷின் உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அலறி துடித்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று காலையில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.