முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இது முடிவல்ல புதிய தொடக்கம்" - பாஜகவில் இணைந்த பின் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை.!

03:45 PM Mar 13, 2024 IST | Mohisha
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததாக நேற்று அறிவித்தார்.

Advertisement

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜக உடன் இணைந்ததற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான காரணங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்ததற்கான காரணத்தை தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்த பின்னர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என்னுடைய சிந்தனைக்கு இந்தத் தேர்தல் ஞானத்தின் உதயமாக அமைந்திருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார். மேலும் "ஜனநாயகம் குறைந்து பணநாயகத்தின் கை மேலோங்கிய இந்த சூழலில் என்னுடைய நினைத்த இலக்கை அடைய முடியவில்லை".

"இது என் முடிவல்ல வருங்கால எழுச்சியின் தொடக்கம் மீண்டும் ஒருமுறை மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் அரசியலில் அறிமுகமான சரத்குமார் சிறிது காலம் அதிமுகவில் பயணம் செய்த பின்பு சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக் கட்சியை விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது கட்சியை அவர் பாஜகவுடன் இணைத்திருக்கிறார்.

Read More: “தேர்தல் நியாயமாக நடைபெற DMK அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” – அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி.!

Advertisement
Next Article