இனி வீடு வாங்கவே முடியாது போலயே..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! எவ்வளவு தெரியுமா..?
நம் அனைவருக்குமே சொந்தமாக வீடு என்பது இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி ஒவ்வொருவரும் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க முயற்சிப்பதால் ரியல் எஸ்டேட் துறை சாதகமாக இருப்பதாக கிரடாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகபட்சமாக 30% வரை வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 7% அதிகரித்துள்ளது. குஜராத் அகமதாபாத்தில் விலை 13% உயர்ந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக கர்நாடகா தலைநகர் பெங்களூரு உள்ளது. பெங்களூருவில் வீடுகளின் விலை 28% அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் 6% விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் வீடுகளின் விலை தொடர்ந்து சீராக உள்ளது. வீடுகளின் விலை அதிகரித்தாலும், விற்பனையில் வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்படும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகளாக வீட்டுச் சந்தை ஆரோக்கியமான முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிலையான வட்டி விகிதங்கள் தொடர்வதாலும், பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டதாலும், வீட்டுச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.
வீடுகளின் விலை அதிகமாக இருந்தாலும், வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வீடு விற்பனையும் மேம்பட்டு வருகிறது. இந்தியாவின் 8 நகரங்களில் வீடு விற்பனை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்து வருகிறது. வீடு விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கைகளும், வீடு விற்பனை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. தேவை அதிகரித்துள்ளதே விற்பனை உயர்வுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Google Search-இல் வந்த புதிய அம்சம்..!! இனி இதை டைப் செய்தாலே போதும்..!!