’நாளை உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்காது போலயே’..!! காலிஸ்தான் பயங்கரவாதி பகிரங்க மிரட்டல்..!!
அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை 'மூடப்போவதாக' காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள வீடியோவில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' நிறுவனர், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் குறித்து பேசுவதையும், இவ்வாறு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைத் தூண்டிவிட முயற்சிப்பதையும் காணமுடிந்தது.
தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் காலிஸ்தான் பயங்கரவாதி பேசுவதைக் அந்த வீடியோவில் கேட்க முடிந்தது. மிரட்டல் வீடியோவை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அக்டோபர் மாதம், பன்னூன் பிரதமர் மோடியை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.
தடைசெய்யப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) அமைப்பின் தலைவரான பன்னுன், "பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். வன்முறையைத் தூண்டும்" என்றார். செப்டம்பரில், இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டிக்கு முன்னதாக அச்சுறுத்தல்கள் மற்றும் பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.