மக்களே இலவசம்..!! மின்வாரியத்தின் அறிவிப்பை பாருங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சூப்பர் சான்ஸ்..!!
தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் பேனல்கள் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டிற்கு தேவையான சூரிய கூரை திறன் கணக்கீடு செயலியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின் தேவைகளை சமாளிக்க முடியும். உங்கள் வீட்டிற்கு தேவையான சோலார் மின்சாரத்தை கணக்கிட வழி உள்ளது.
இதற்காக நீங்கள் https://www.pmsuryaghar.gov.in/rooftop_calculator என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். உங்களின் மாநிலம், மின்சார இணைப்பின் விவரம், இதுவரை சராசரியாக கட்டும் மாத மின் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும். பின்னர், அதன்பின் அரசின் புரிதலுக்காக கூடுதல் தகவல்களை கொடுக்க வேண்டும்.
அதாவது உங்கள் வீட்டிற்கு மேலே இருக்கும் இடத்தின் அளவு எவ்வளவு..? எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்..? என்பது போன்ற தகவல்களை கொடுக்கலாம். இதை கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு சோலார் மின்சாரம் தேவை என்று கணக்கு வழங்கப்படும். இதை வைத்து வீட்டிற்கு மேலே சோலார் பேனல் அமைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை அரசு வரவேற்று வருகிறது. அதன்படி, இதற்காக வழங்கப்படும் மானியம் தொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவையில்லை. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ரயில்வேயில் 5,066 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?