முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மழை செய்திகள் வந்தாலே போதும்!… பள்ளி லீவான்னு கேட்டு போன் பண்ணுறாங்க!… தஞ்சை ஆட்சியர் வருத்தம்!

06:55 AM Jan 10, 2024 IST | 1newsnationuser3
Advertisement

மழை பெய்து விட்டாலே போதும் இன்றைக்கு பள்ளிக்கு லீவ் விடுவாங்களா? என்ற எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறை மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. வெளியில் லேசாக வானம் இருட்டி விட்டாலே போதும் மழை பெய்யுமா என வானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதோடு அவ்வப்போது டிவி முன் உட்கார்ந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்து இருக்குதா என்று மாணவர்கள் பார்ப்பதை காண முடிகிறது.

Advertisement

இந்த நிலையில், மழை தொடர்பான எச்சரிக்கை செய்திகள் டிவியில் வந்தாலே போதும் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்கள் எனக்கு போன் செய்து இன்றைக்கு பள்ளிக்கு லீவு உண்டா? என கேட்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மழை தொடர்பான செய்திகள் டிவியில் வந்தாலோ.. சிறிய தூறல் அளவிலான மழை பெய்தாலோ மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக எனக்கு போன் செய்து, இன்றைக்கு பள்ளிக்கு லீவு உண்டா? என்று கேட்கிறார்கள். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் லீவு விட வேண்டும்?.. நான் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். கேரளாவில் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதலே மழை தொடங்கிவிடும்.

அப்போது நான் மழையில் நனைந்தபடியே தான் பள்ளிக்கு செல்வேன். அந்த நேரத்தில் மழை பெய்கிறது என்று நினைத்து நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்பு ஒரு கலெக்டராக நின்றிருக்க முடியுமா. எனவே தயவு கூர்ந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.. வாழ்க்கையில் கல்வி மட்டுமே மற்றவர்களால் திருட முடியாத சொத்தாகும் என்று கூறியுள்ளார்.

Tags :
rain newsTanjore Collectorதஞ்சை ஆட்சியர் வருத்தம்பள்ளி லீவா?போன் பண்ணுறாங்கமழை செய்திகள்
Advertisement
Next Article