ஜூன் 1ஆம் தேதி முதல் வட தமிழகத்தில் டமால் டுமீல் தான்..!! குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்..!!
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், ஜூன் 2ஆம் தேதி முதல் வெயில் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு அதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே, சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் வெயில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாக பதிவானது சென்னையில்தான். இந்நிலையில் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெயில் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கடந்த சில தினங்களாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும். ஜூன் 1ஆம் தேதி முதல் வட தமிழகத்தில் டமால் டுமீல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெப்பம் ஜூன் 1 வரை இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Read More : கொசுக்களால் உயிரே போகும் அளவிற்கு பரவும் நோய்கள்..!! நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி..?