For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நல்லா தூங்கி நிறைய நாட்கள் ஆகிறதா!. நிம்மதியாக தூங்க இதை ட்ரை பண்ணி பாருங்க!..

07:35 AM Jan 03, 2024 IST | 1newsnationuser1
நல்லா தூங்கி நிறைய நாட்கள் ஆகிறதா   நிம்மதியாக தூங்க இதை ட்ரை பண்ணி பாருங்க
Advertisement

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை செய்கின்றனர்.

Advertisement

ஒருவர் தூக்கத்தை இழக்க தொடங்கும் போது அவரது உடல், பல்வேறு நோய்களின் கூடாரமாக மாறுகிறது. பெரும்பாலானவர்கள் தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு நமது ஆயுர்வேத மருத்துவத்தில் எளிமையான ஒரு மருந்து இருக்கிறது.

தூக்கமின்மையை போக்குவதற்கு சீமை சாமந்தி பூவினை தேனீராக பருகி வந்தால் மன அமைதி ஏற்பட்டு நல்ல தூக்கம் கிடைக்கும் என ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சீமை சாமந்தியில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் இருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களான கார்டிசோலை கட்டுப்படுத்துகிறது. இதனால் மன நிம்மதி அடைந்து நல்ல தூக்கமும் கிடைக்கிறது.

செய்முறை : இந்த சீமை சாமந்தி பூவை உலர வைத்து கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடங்கள் போட வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி அவற்றுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். இவற்றை உறங்கச் செல்வதற்கு முன் குடித்தால் மன அமைதியோடு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சீமை சாமந்தியில் தயாரிக்கப்படும் தேநீர் தான் கெமோமைல் டீ என இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement