For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இது ஒரு அவமானம்'!… தவறாக கருதப்பட்டுள்ளது!… ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து ஏபிடி விளக்கம்!

06:59 AM May 14, 2024 IST | Kokila
 இது ஒரு அவமானம்  … தவறாக கருதப்பட்டுள்ளது … ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து ஏபிடி விளக்கம்
Advertisement

ABD Villiers: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடுகள் ஈகோ உந்துதல் என்று கூறியது தவறாக கருதப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமாராக இருந்ததாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா பற்றி ஏபிடி வில்லியர்ஸ் பேசியது விவாதமாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா துணிச்சலுடன் செயல்படுவது தனக்கு பிடிக்கும் என்றும் அவருடைய செயல்பாடுகள் ஈகோ உந்துதல் என்றும் பேசியிருந்தார்.

மேலும், ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி பாணியை பின்பற்றுவதாகவும் அது அவருடையது கிடையாது எனவும் கூறியிருந்தார். அவருடைய தோனி பாணியிலான கேப்டன்சி இளம் வீரர்களை கொண்ட குஜராத் அணிக்கு எடுபடும் என்றும் அதேசமயத்தில் சீனியர் வீரர்களை கொண்டிருக்கும் மும்பை அணியில் சரிவரவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த கருத்துகள் தற்போது தவறாக கருதப்பட்டுள்ளதால் இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பந்தமாக கூறியது குறித்து நிறைய எதிர்வினைகள் ட்விட்டர் தளத்தில் இருப்பதாக அறிகிறேன். ஜர்னலிசம் மற்றும் ரிப்போர்ட் செய்வது இந்த அளவுக்கு கீழாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. நீங்கள் சிலர் சுட்டிக்காட்டியதை மட்டும் எடுத்துவிட்டு மீதியை அப்படியே விட்டு விடுகிறேன்.

இப்போதும் சொல்கிறேன் எனக்கு ஹர்திக் பாண்டியாவின் துணிச்சலான கேப்டன்சி பிடிக்கும். அதே சமயத்தில் அவர் கேப்டன்ஷியில் காட்டுவது உண்மையான குணம் கிடையாது. ஏனென்றால் மிகவும் அமைதியான ஏபி டி வில்லியர்ஸ் வீட்டில் இருப்பவர். ஆனால் நான் களத்தில் ஆக்ரோஷமாக இருந்திருக்கிறேன். இந்த மாற்றம் ஒரு நடிப்பு. இதைத்தான் நான் ஹார்திக் பாண்டியா விஷயத்திலும் கூறினேன்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Readmore: பணவீக்க விகிதம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 4.83% ஆக உள்ளது…!

Advertisement