"இனி வளர்ச்சி இல்ல பாய்ச்சல்தான்.." தமிழகத்தில் 31,000 கோடி முதலீடு.! முதல்வர் ஸ்டாலினின் மாஸ் பேட்டி.!
உலக முதலீட்டாளர்களின் மாநாடு நாளை தொடங்கி இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான் சிங்கப்பூர் வடகொரியா ஜெர்மனி அமெரிக்கா டென்மார்க் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க இருக்கின்றன.
மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் பிரதிநிதிகளும் பங்கு பெற உள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 170 க்கும் அதிகமான பேச்சாளர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தொழில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச நிறுவனம் 31 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் உலகப் புகழ் பெற்ற மின்வாகன உற்பத்தி நிறுவனமும் தென் தமிழகத்தில் அதன் தொழிற்சாலையை நிறுவ இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இத்தகைய முதலீடுகள் தமிழகத்தில் இடம்பெறுவது தமிழக வளர்ச்சியின் புதிய பாய்ச்சல் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகப் புகழ் பெற்ற விளையாட்டு சாதனங்கள் மற்றும் காரணிகள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் தனது மிகப் பெரிய தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் மற்றும் முதலீடு தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தை காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.