முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கெட்ட கொழுப்பை அசால்ட்டா குறைச்சிடும்..!! வாரம் 2 முறை சாப்பிட்டாலே போதும்..!! பிரண்டையின் பலன்களை தெரிஞ்சிக்கோங்க..!!

It improves the digestive system. It helps in repairing blockages in the blood vessels of the heart and regulates blood flow.
05:10 AM Jan 02, 2025 IST | Chella
Advertisement

இயற்கை மூலிகைகள் ஏராளம் உண்டு. அத்தகைய அற்புதமான மூலிகைகளில் ஒன்று தான் பிரண்டை. இது கொடி போல் வளரும். இதில் இலைகள் இருக்கும். நாம் இதன் தண்டுகளை சாப்பிடுவோம். பிரண்டையை சாறு எடுத்து 6 டீஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர வேண்டும். இதனால், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும்.

Advertisement

வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டு வந்தால், உடல்நலம் அதிகரிக்கும். கழுத்தை அசைத்தால் வலி ஏற்படும் நபர்களுக்கு இந்த பிரண்டை வரப்பிரசாதம். வாதம் , கபத்தை கட்டுப்படுத்தும். இந்த பிரண்டைக்கு பித்தத்தை அதிகப்படுத்தும் குணம் உண்டு. எனவே, பித்தம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

பிரண்டை வகைகள்: இந்த பிரண்டை நிறைய வகைகள் உள்ளன. உருட்டு பிரண்டை, பிரண்டை, சிவப்பு பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை, கலிபிரண்டை, தீம் பிரண்டை, ஓலை பிரண்டை ஆகியவை இதன் வகைகளாகும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கும்: அஜீரண மண்டலத்தை சரி செய்யும். இதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகு வலியை நீக்கும்.

உடல் எடை குறைக்க உதவும்: சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டு வர நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது இந்த பிரண்டையை சாப்பிடலாம். பிரண்டையை உடல் எடை குறைக்க பயன்படுத்துகிறார்கள். உடல் எடையை மட்டும் குறைக்காமல் கெட்ட கொழுப்பையும் குறைக்கும். மூட்டு வலியை குணமாக்கும். வாய் புண்களை ஆற்றும் குணம் இந்த பிரண்டைக்கு உள்ளது.

Read More : செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! புத்தாண்டுக்கு வந்தது ஜாக்பாட் அறிவிப்பு..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!!

Tags :
உடல் எடை குறைப்புகொலஸ்ட்ரால்பிரண்டை
Advertisement
Next Article