For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்றுமுதல் இயங்காது!… வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

06:48 AM Jan 25, 2024 IST | 1newsnationuser3
இன்றுமுதல் இயங்காது … வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு
Advertisement

இன்றுமுதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்குதடையின்றி பணப்பர்வர்த்தனையை மேற்கொள்ளலாம்.

ஜனவரி மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், குடியரசு தினத்தன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், ஜனவரி 27ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்று கிழமை ஆகிய நாட்களில் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement