For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நண்பனை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்ததால் விபரீதம்..!! மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

The incident of beating a husband to death with a stick after denouncing his wife's adultery has caused a shock in Kanchipuram.
04:06 PM Jun 19, 2024 IST | Chella
நண்பனை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்ததால் விபரீதம்     மனைவியுடன் கள்ளத்தொடர்பு     கடைசியில் ட்விஸ்ட்
Advertisement

மனைவியுடனான கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ரவியின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். இவரை, அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ரவி. இந்நிலையில், மணிமேகலைக்கும் மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

நண்பன் ரவி இல்லாத நேரத்தில் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து மணிமேகலையுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் எப்படியோ கணவர் ரவிக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பனை எச்சரித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் மணிகண்டன் நடத்திவரும் பானிபூரி கடைக்கு சென்ற ரவி, என் மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது தம்பி கோபி ஆகியோர் சேர்ந்து, அங்கு கிடந்த பெரிய கட்டையால் ரவியை சரமாரியாக அடித்துள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இருவரும் பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரது தம்பி கோபியை தேடி வருகின்றனர்.

Read More : முதல்வரின் மாஸ் உத்தரவு..!! இனி ஒரு நிமிடம் போதும்..!! பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய மாற்றம்..!!

Tags :
Advertisement