ரஜினிக்கு கொடுத்த அதே மருந்துதான்!… விஜயகாந்தின் மொத்த வாழ்க்கையும் போயிடுச்சு!
மக்கள் மனதில் கேப்டனாக என்றும் வாழும் நடிகர் விஜயகாந்த், இன்று நம்மோடு இல்லை. இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது என தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவனாக மட்டுமல்லாமல் ஏழைகளின் நாயகனாகவும் விளங்கினார். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தார். மேலும் முதன் முதலில் சினிமாக்காரர்களுக்கு இலை போட்டு வயிறார சாப்பாடு போட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.
முன்பெல்லாம் சினிமாவில் டெக்னீசியன்கள், துணை நடிகர்கள் ஆகியோர்களுக்கு பொட்டலத்தில் தான் சாப்பாடு கொடுப்பார்கள். அதை எல்லாம் பார்த்த விஜயகாந்த் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தான் சாப்பிடும் உணவையே சக நடிகர்களுக்கும் கொடுத்தார். இதுதான் திரை உலகில் அவர் கொண்டு வந்த முதல் புரட்சி. இதை நான் திமிராகவும், கர்வமாகவும் சொல்வேன் என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அந்த அளவுக்கு மக்களின் வயிறை நிறைய வைத்து அழகு பார்த்த கருப்பு தங்கம் தான் கேப்டன். பிரபலங்கள் மட்டுமல்ல, அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அவருடனான தனி நினைவுகள் உண்டு.
இப்படி, திரை, அரசியலில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்துவந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது, சிங்கப்பூர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். இதேபோல், ரஜினிகாந்தும் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்ட விஜயகாந்தும் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது, எப்போதுமே நடிகர் விஜயகாந்த் மீது தனி அன்பு கொண்டவர் ரஜினி. அதிலும் சிகிச்சை தொடர்பாக ரஜினி சிகிச்சைபெற்ற அதே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றதால், அவ்வபோது விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்துவந்துள்ளார் ரஜினி. ஒரு கட்டத்தில் விஜயகாந்த் தொடர் சிகிச்சையின்போது அவருக்கு வேறு சில பிரச்சனைகளும் தொற்றிக்கொண்டன. இதனால் அவரால் பேச முடியாமல் போனது.
இதுதொடர்பாக ரஜினி தனது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுகையில், நானும் கடவுள் நம்பிக்கை நிறைந்தவன். விஜயகாந்தும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அந்த சிங்கப்பூர் மருத்துவமனையில் எனக்கு கொடுத்த அதே மருந்துதான் விஜயகாந்துக்கும் கொடுக்கப்பட்டது. என் உடல்நிலைக்கு மருந்து செட் ஆகிவிட்டது. ஆனால் விஜயகாந்துக்கு அந்த மருந்தை ஒரு டோஸ் அதிகமாக கொடுத்துவிட்டார்கள். அதுவே பின் நாட்களில் அவருக்கு நரம்பு கோளாறுக்கு கொண்டுபோய்விட்டது என்று சொல்லி வருந்தியதாக கூறப்படுகிறது.