3-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு..!! திடீர் நெஞ்சு வலியால் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு மருத்துவமனையில் அனுமதி..!!
விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவர் தில் ராஜு. மேலும், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இந்நிலையில், இவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் காலை முதல், இரவு வரை நடந்து முடிந்த சோதனையில், தில் ராஜுவிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.26 கோடி பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான், தயாரிப்பாளர் தில் ராஜு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஐடி அதிகாரிகளிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தில் ராஜூ கூறிய நிலையில், அதிகாரிகளின் காரிலேயே மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.