அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே சம்பளம்...!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே சம்பளம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 1-ம் தேதிக்கு பதிலாக இந்த மாதம் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும். தற்போது 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% அகவிலைப்படி கடைபிடிக்கப்படுகிறது. தற்போது 4% மேலும் உயர்த்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு போனஸ்
உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 புள்ளி 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும். இதனால், குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும். 2,75,670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது.