’லஞ்சம் வாங்குவது MP, MLA-க்களின் உரிமை இல்லை’..!! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து..!!
11:52 AM Mar 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை என்றும் அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறுகையில், "இன்று, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கில் இருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழித்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது” எனத் தெரிவித்தார்.
Read More : Registration | அசத்தும் பத்திரப்பதிவுத்துறை..!! ரூ.16,653.32 கோடி வருவாய்..!! புதிய சாதனை..!!