For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறு தொழில் தொடங்க ஊராட்சியில் அனுமதி பெறுவது கட்டாயம்...? தமிழக பாஜக கண்டனம்

It is mandatory to get permission from the panchayat to start a small business
05:05 PM Nov 02, 2024 IST | Vignesh
சிறு தொழில் தொடங்க ஊராட்சியில் அனுமதி பெறுவது கட்டாயம்     தமிழக பாஜக கண்டனம்
Advertisement

சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது தமிழக பாஜக துணைத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்; சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதை முழுமையாக கடைப்பிடிக்காத நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதை முழுமையாக கடைப்பிடிக்காத நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

மின்கட்டணத்தை மூன்று முறை உயர்த்தியது, சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, தொழில் தொடங்க உரிமக் கட்டணம் உயர்வு என பல்வேறு காரணங்களால் தற்போது சிறு, குறுந்தொழில் செய்பவர்களும் மிகவும் சிரமத்துக்கும், நஷ்டத்துக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதுபோன்றதொரு திட்டத்தை வகுத்திருந்தால் தமிழகத்தில் சிறு தொழில் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடாமல் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
Advertisement