வனவாசத்தில் ராமர் சாப்பிட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு..!! இதில் இத்தனை நன்மைகளா?
வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதிலும், புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பங்கு மிக அதிகமாக உள்ளன. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை நிறைய சாப்பிட்டால் என்னாகும்? அதைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு குறித்து தெரிவதில்லை. ஊட்டச்சத்து மிகுந்த இந்தக் கிழங்கை நமது உணவுப் பட்டியலில் தவறாமல் சேர்த்துக் கொள்வது அவசியம். எனவே, சர்க்கரை வள்ளக்கிழங்கில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1) இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடலாம். வெறுமனே அவித்து, தோல் உரித்த கிழங்கின் மீது எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
2)கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து வகைகள் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் தாராளமாக உள்ளன. நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மீது இது பிணைந்துக் கொண்டு, அதை வெளியேற்ற உதவியாக இருக்கும். இதனால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும். அதிலும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உது மிகவும் உதவியாக இருக்கிறது.
3) நம் இதய நலனை மேம்படுத்துவதிலும், ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதிலும் பொட்டாசியத்தின் பங்கு முக்கியமானதாகும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்டென்சனுக்கு காரணமான சோடியத்தின் செயல்பாடுகளை பொட்டாசியம் கட்டுப்படுத்தும்.
4) சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் சத்து நிறைவாக இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் சி சத்து தாராளமாக கிடைக்கும். அத்துடன் ரத்த நாள பாதிப்புகளை தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்களும் இதில் கிடைக்கும். இதய நோயால் பாதிக்கப்படும் மக்கள் வாரம் ஒருமுறையாவது சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டு வரலாம்.
5) ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோடின் சத்து மிகுதியாக உள்ளது. இது நம் உடலில் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவும். இதேபோன்ற பீட்டா கரோடின் சத்து கேரட்டிலும் கிடைக்கிறது.
6) நீடித்த அழற்சி காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன. இதனால் நம் உடலில் அழற்சி குறையும்.
7) உருளைக் கிழங்குகளை ஒப்பிடுகையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாகும். ஆகையால் இது நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக ரத்த சர்க்கரை அளவால் இதயநலன் மோசமடையக் கூடும்.
Read more ; பிரான்ஸ் புதிய பிரதமராக 73 வயதான மைக்கேல் பார்னியர் நியமனம்..!!