சுவாமி மாலைகளை பக்தர்களுக்கு அணிவிக்கலாமா? ஆன்மிகம் என்ன சொல்கிறது?
கோவிலில் அர்ச்சனை செய்யும் போது கடவுள் சிலைகளுக்கு மாலை போடுவது வழக்கம்.. அர்ச்சை செய்து முடிந்த பிறகு வேறொறு மாலையை பூசாரிகள் பக்தர்களுக்கு போடுவதை பல இடங்களில் பார்த்திருப்போம்.. அவ்வாறு செய்வது சரியா என்ற கேள்வி பலருக்கு தோன்றும்.
இதற்கு ஆன்மீகவாதிகள் பதில் அளித்தபோது பக்தர்கள் அனைவரும் கொடுக்கும் மாலைகளை கடவுள் சிலைக்கு போடும் போது அந்த மாலை புனித தன்மை பெறுகிறது என்றும் தெய்வ சக்தியும் அந்த மாலைகளுக்கு கிடைக்கிறது என்றும் அந்த மாலையை பக்தர்களுக்கு அணிவதால் பக்தர்கள் திருப்தி அடைவார்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அனைத்து மாலைகளையும் கடவுள் சிலையில் இருந்தால் எண்ணிக்கை அதிகம் ஆகிவிடும் என்றும் அவ்வப்போது அந்த மாலைகளை எடுத்து பக்தர்களுக்கு கொடுப்பதால் பக்தரும் மகிழ்ச்சி அடைவார்கள், சிலையில் மாலைகளும் அதிகம் சேராது என்கின்றனர். எனவே கடவுளுக்கு சாத்திய மாலையை பக்தர்களுக்கு அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை மாறாக பக்தர்களுக்கு அது தெய்வ அருள் கிடைத்த நம்பிக்கை கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
Read morer ; வயநாடு நிலச்சரிவு | பாரம்பரிய ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்த கேரள அரசு..!!