ஞானசேகரன் அந்த சாரிடம் பேசியது உறுதி..!! சிறப்பு விசாரணைக் குழுவிடம் உண்மையை போட்டுடைத்த மாணவி..!!
ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி உறுதியாக கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீது பாலியல் சீண்டல், கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், ஞானசேகரன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசியதாகவும், அதன் பிறகு அந்த சாருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் மாணவி குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 'யார் அந்த சார்' என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மாணவியிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி உறுதியாக கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில், ஃபோன் அழைப்பு வந்தபோது 'மிரட்டிவிட்டு வந்தேன்' என்று ஞானசேகரன் பேசியதாக மாணவி கூறியுள்ளார். இதனால் ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியிருக்கிறார் என்பது இந்த விசாரணையில் உறுதியாகியுள்ளது.