பட்டா வழங்க லஞ்சம் வாங்குவோர் இனி தப்பிக்க முடியாது..!! வந்தது சூப்பர் அறிவிப்பு
ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதேநேரம், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் கையூட்டு பெறுவதை தவிர்க்க அதிலும் நடைமுறைகளை மாற்றி அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்குவதும், பத்திரம் பதிவதும் சாத்தியமாகி வருகிறது.
ஏனெனில் பத்திரப்பதிவு துறை சம்பந்தமாகவும், வருவாய்துறை சம்பந்தமாகவும், ரியல் ஸ்டேட் துறை சம்பந்தமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையான புகார்கள் வந்தன. இதையடுத்து முதலவர் மு க ஸ்டாலின், பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தானாகவே பட்டா தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளார். இந்ததிட்டம் விரைவில் அமலுக்கு வரப்போகிறது.
அடுத்ததாக தற்போது கட்டிட வரைப்பட அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களை ஒட்டுமொத்தமாக களைவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read more | 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்… 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது கனமழை…!