அனைத்து உணவக உரிமையாளர்களுக்கும் இது கட்டாயம்...! முதல்வர் யோகி அதிரடி உத்தரவு...!
அனைத்து உணவக உரிமையாளர்களும் தங்கள் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு உணவகங்களும் , தள்ளுவண்டி உணவுக்கடைகள் உட்பட அனைவரும் தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும்.
கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கன்வர் யாத்திரை ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரபிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முசாபர்நகர் மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு இதே உத்தரவை உணவகங்களுக்கு விதித்தது. இது மாநிலத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. “மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு கேடு விளைவிக்கும் என எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.