அதிர்ச்சி..!! தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் இருந்து பல லட்சம் பேர் நீக்கம்..!! என்ன காரணம்?
தமிழகத்தில் பல லட்சம் பேரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் , அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
ரேஷன் அட்டைகளின் பெயர் நீக்கத்திற்காக இறந்தவர்களின் ஆதார் நகலை கேட்கும் போது மக்கள் உயிருடன் இருக்கும் நபரின் ஆதார் நகலை கவனக்குறைவுடன் கொடுத்துவிடுகிறார்கள், பின்பு ஆதார் நகலை வைத்து அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு பிறகு ஆதார் எண்ணை தவறாக வழங்கிய நபர் அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களை குற்றம் சொல்கின்றனர். இதனால் தான் மக்கள் பெயர் நீக்கம் செய்ய வரும் போது சரியான நபரின் ஆதார் நகலை கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், உடனடியாக ரேஷன் கார்டை சரிபார்க்கவும். உங்கள் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், உடனடியாக ரேஷன் கார்டு அலுவலகத்தை அணுகி திருத்தம் செய்து கொள்ளலாம். உயிரிழந்தவரின் ஆதார் கார்டை கவனமாக கையாண்டு, தவறான நபர்களிடம் கொடுக்காமல் இருக்கவும்.
நமது தமிழக மக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. மேலும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் குறைவான விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய ரேஷன் அட்டை வழங்குதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் போன்ற பல்வேறு குறைபாடுகளை அரசு சரிபார்த்து வருகின்றனர். மேலும் மக்கள் இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
Read more ; யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! கோவை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!