அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து.. தமிழகம் வருகிறார் அமித்ஷா..!! விஜயகாந்த் நினைவு ஊர்வலத்தில் பங்கேற்பு..?
விஜயகாந்த் நினைவு ஊர்வலத்திய முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிச.27 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷா வருகிற 27 ஆம் தேதி இரவு சென்னைக்கு வருகை தர உள்ளார். டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையில் விஜயகாந்த் நினைவு ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் அமித்ஷாவின் வருகை கவனம் ஈர்த்துள்ளது. விஜயகாந்த் நினைவு ஊர்வலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அமித்ஷா, அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்ய உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் கோவை உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் ரிமோட் மூலம் திறந்து வைக்க உள்ளார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதிப்பு செய்த விவகாரத்தில் பேசு பொருளாக மாறினார். அவருக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read more ; அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல : உயர்நீதிமன்றம்