ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. சிக்குகிறாரா சம்போ செந்தில்?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், 28 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனையடுத்து, மீதமுள்ள 27 பேரிடம் செம்பியம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டது என முதலில் கூறப்பட்டாலும், பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை படி காவல்துறையினரின் குற்றப்பத்திரிகையில், A1 ஆக ரவுடி நாகேந்திரனும், A2 ஆக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ 3 குற்றவாளியாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பெயரை காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் சம்பவம் செந்திலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில், அவரது இருப்பிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கியுள்ள போலீசார், அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read more ; வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு.. உணவு விநியோகித்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்..!!