முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷால் படம் ரிலீஸ்!! எப்போ தெரியுமா?

It has been reported that the movie Madha Gaja Raja, directed by Sundar C and starring Vishal, which was made almost 11 years ago, is now releasing.
10:48 AM Jul 10, 2024 IST | Mari Thangam
Advertisement

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்பு உருவான மத கஜ ராஜா திரைப்படம் இப்போது ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்கி நடித்து சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2024ஆம் ஆண்டில் முதல் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்தது.

அரண்மனை 4 திரைப்படத்தை தொடர்ந்து கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் விஷால் உடன் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்காக் விஷால் பாடிய ஒரு பாடலின் வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. பட வேளைகள் முடிந்த 11 ஆண்டுகள் ஆகியும் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு பண பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அரண்மனை 4 பட ப்ரோமோஷனில்கூட இந்தப் படம் குறித்து கேட்கப்பட்டதற்கு சுந்தர்.சி மேம்போக்காகவே பதிலை சொன்னார். இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
actor vishalACTRESS ANJALIactress varalakshmiMadha Gaja Rajasundar c
Advertisement
Next Article