போன வருஷம் ஜெயிலர்.. இந்த வருஷம் கூலி.. சம்பவம் இருக்கு..!! - ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், தங்க குடோனுக்குள் அதிரடியாக நுழையும் ரஜினி, அடியாட்களை துவம்சம் செய்து மிரட்டலாக பஞ்ச் வசனம் பேசுவதோடு, படத்தின் தலைப்பு ‘கூலி’ என்று முடிந்திருக்கும்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார்.
இத்திரைப்படம் கோடை விடுமுறை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவி வந்தநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கூலி திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான 'ஜெயிலர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read more ; “வயதான பெண்களுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லையா?” இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!!!