வருமான வரி ரீபண்ட் இன்னும் வரவில்லையா? என்ன காரணம்? ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?
வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து உங்களுக்கு வருமான வரித் தொகை வரவில்லை என்றால் பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் பலருக்கும் கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டது. குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்று ரீபண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்னும் 14 லட்சம் பேருக்கு இன்னும் வருமான வரிவிதிப்பு கொடுக்கப்படவில்லை. இதுவரை 2.48 கோடி பேருக்கு ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாவதாக, வருமான வரி ரிட்டர்ன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். வங்கி விவரங்கள், முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் தேதி. எனவே, ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
இதில் கிட்டத்தட்ட 12 லட்சம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். முறையாக தாக்கல் செய்து வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரீபண்ட் சென்றுவிட்டது.
ரீஃபண்ட் தொகை வராமல் இருந்தால், அதை ஆன்லைன் செக் செய்யலாம். அனைத்து ஆவணங்களும் முறையாக கொடுக்கப்பட்டிருந்தால், ஐ.டி.ஆர் சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் இதை செய்து பார்க்கலாம்.
- வருமான வரி இணையத் தளப் பக்கத்திற்கு செல்லவும்.
- ஹோம் பக்கத்தில் உங்கள் பான் எண், பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
- இப்போது My Account செக்ஷன் செல்லவும்.
- இதில், Refund/Demand Status பட்டனை கிளிக் செய்தால், உங்களின் ஐ.டி.ஆர் நிலை பற்றி விவரங்கள் தெரிந்து விடும்.
Read more ; முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப்பதிவு..!! என்ன காரணம்..? பெரும் பரபரப்பு..!!