For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோ லீவ்...! தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும்...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

It has been informed that admissions will be held today in government and private schools on the occasion of Vijayadashami day.
06:14 AM Oct 12, 2024 IST | Vignesh
நோ லீவ்     தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும்     பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
Advertisement

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். சில தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இது பல பள்ளிகளிலும் விரிவடைந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளிலும் விஜயதசமிக்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாள்கள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

Advertisement

இந்த சூழலில் தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி தினம் அன்று அரசு பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், அன்றைய தினம் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்பினால் இன்று நேரடியாக சென்று பள்ளிகளில் சேர்க்கலாம்.

Tags :
Advertisement