மகிழ்ச்சி...! 4 நாட்கள் தொடர் விடுமுறை...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!
தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17-ம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கம் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.