For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரொம்ப நாளா எதிர்பார்த்த அப்டேட்.. வந்தாச்சு!! இனி ஒரே UPI அக்கவுண்டை 5 பேர் பயன்படுத்தலாம்..

It has been announced that one UPI app can be used by up to 5 family members or friends.
03:38 PM Sep 06, 2024 IST | Mari Thangam
ரொம்ப நாளா எதிர்பார்த்த அப்டேட்   வந்தாச்சு   இனி ஒரே upi அக்கவுண்டை  5 பேர் பயன்படுத்தலாம்
Advertisement

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது யுபிஐ செயலின் மூலம் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை எளிதாக பொருட்கள் வாங்கிய பிறகு பணத்தை அனுப்ப முடியும் என்பதால் பலரும் அதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் யுபிஐ செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு யுபிஐ செயலியை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என 5 பேர் வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதன்படி, யூபிஐ- பயன்படுத்தி வரும் ஒருவர் தனது யூபிஐ கணக்குடன் செகண்டரி யூசராக தங்கள் குடும்ப உறுப்பினரையோ.. நணபரையோ அல்லது ஊழியரையோ இணைத்துக் கொள்ளலாம். இப்படி இரண்டாவது யூசராக இணைக்கப்படுவர்கள், முதன்மையான யூபிஐ கணக்கில் இருந்து அதாவது, பிரைமரி யூபிஐ கணக்கில் இருந்து பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதற்கு யூபிஐ கணக்கு வைத்திருக்கும் நபர், எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்யலாம் என்பதை லிமிட் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இல்லையென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் யூபிஐ கணக்கு வைத்திருப்பவர் ஒப்புதல் கொடுத்த பிறகே பரிவர்த்தனை செய்யும்படியாக வைத்துக்கொள்ள முடியும். யூபிஐயில் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த புதிய வசதி, யூபிஐ கணக்கு இல்லாதவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய அச்சப்படுபவர்கள், நிறுவனங்களின் கணக்கை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி பாதிப்பு ஏற்படுமா?

மோசடிகளை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. தனது யூபிஐ கணக்குடன் ஒருவரை இணைக்கும் போதே பிரைமரி யூசர், எவ்வளவு தொகைவரை எடுக்க முடியும் என்பதை செட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அப்ரூவல் கேக்கும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 15 ஆயிரமும், ஒரு பரிவர்த்தனையின் போது 5 ஆயிரமும் என்ற வரம்பை என்பிசிஐ விதித்துள்ளது.

யூபிஐ செயலி வாயிலாகவே தனது கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கும் செக்கன்டரி யூசரின் பரிவர்த்தனைகளை பிரைமரி யூசர் கண்காணிக்க முடியும். 15 ஆயிரத்திற்கு மிகாமல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அதிகபட்ச வரையறையாக பிரைமரி யூசர் செட் செய்து கொள்ளலாம். ஒருவர் தனது யூபிஐ - ஐடியில் 5 பேர் வரை செகண்டரி யூசராக சேர்த்துக்கொள்ளலாம். அதேவேளையில், செகண்டரி யூசராக ஒரு ஐடிக்கு மேல் இன்னொரு ஐடியில் சேர முடியாது. பிரைமரி யூசர் எந்த நேரத்திலும் செக்கண்டரி யூசரை தனது யூபிஐ -யில் இருந்து நீக்கி கொள்ள முடியும்.

Read more ; 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் 50% மானியம்..!! விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement