முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”எப்படி தாய் ஆனார் என்பது முக்கியமில்லை”..!! பெண் அதிகாரிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்..!!

The ICourt has given an action verdict that a woman who becomes a mother through a surrogate mother has the right to take maternity leave.
09:17 AM Jul 05, 2024 IST | Chella
Advertisement

அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களின் குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடையாது.

Advertisement

இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதற்காக மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் திருத்தம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று, தாயான நிதித்துறை அதிகாரிக்கு ஊதியத்துடன் கூடிய 180 நாள் விடுப்பு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்த அதிகாரி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், எப்படி தாய் ஆனார் என்பது முக்கியமில்லை. குழந்தையை பராமரிக்க விடுப்பு அவசியம். எனவே, வாடகை தாய் மூலம் தாயான பெண்ணுக்கு பேறுகால விடுப்பு எடுக்கும் உரிமை உண்டு என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More : இந்த வருடத்திற்குள் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயம்..!! இந்த தேதி தான் கடைசி..!! இனி வாய்ப்பு கிடையாது..!!

Tags :
ஒடிசா உயர்நீதிமன்றம்பெண் அதிகாரிபேறுகால விடுப்புவாடகை தாய்
Advertisement
Next Article