முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தடுத்த சாதனைகளை படைக்க தயாரான இஸ்ரோ!… மற்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை அனுப்ப திட்டம்!

08:54 AM Jan 07, 2024 IST | 1newsnationuser3
Advertisement

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.

Advertisement

இந்த வெற்றியின் மூலம் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகளை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை சூரியனை ஆய்வு செய்வதற்காக தனித்தனியாகவும் சில நேரங்களில் கூட்டாகவும் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. இப்போது இஸ்ரோ அத்திட்டங்களுக்கு இணையாக ஆதித்யா எல்1 உடன் களமிறங்கியுள்ளது.

சூரியன் மட்டுமல்ல, வேறு கோள்களுக்கும் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டம்: புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், "எங்கள் தரைக் கட்டுப்பாட்டு நிலையம் தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. அனைத்து கருவிகளும் நன்றாக வேலை செய்தன. கடினமான கணிதக் கணக்கீடுகளும் கூட மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன" என்றார். ."

100 கிலோவுக்கும் அதிகமான எரிபொருளைக் கொண்டிருப்பதால், இந்த திட்டத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடும் என்று அவர் கூறினார். இந்த பயணத்திற்குப் பிறகு, வீனஸ், செவ்வாய், வியாழன், நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை இஸ்ரோ அனுப்பும் என்று சோம்நாத் கூறினார்.

Tags :
Isroother planetssend spacecraftஇஸ்ரோமற்ற கிரகங்கள்விண்கலங்களை அனுப்ப திட்டம்
Advertisement
Next Article