இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!! தற்காலிக பிரதமராக பொறுப்பேற்ற லெனின்..!!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், தற்காலிக பிரதமர் பொறுப்பேற்றுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் நெதன்யாகுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், நெதன்யாகுவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சைக்காக பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இதனால் நீதி துறை அமைச்சர் யாரிவ் லெனின் தற்காலிக பிரதமராக செயல்படுவார்” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (டிச.30) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். சில நாட்கள் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்” என தெரிவித்துள்ளது.